/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொட்டும் மழையிலும்பள்ளிக்கு சென்ற குழந்தைகள்
/
கொட்டும் மழையிலும்பள்ளிக்கு சென்ற குழந்தைகள்
ADDED : அக் 22, 2025 11:38 PM

குன்னூர்: -குன்னூரில் கனமழையிலும் குழந்தைகள், மாணவர்கள் பலரும் பள்ளிகளுக்கு சென்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மழையின் தாக்கம் குறைந்த நிலையில், நேற்று காலையிலிருந்து கனமழை நீடித்தது.
மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ, மாணவியர் பெற்றோர் காத்திருந்தனர். ஆனால், விடுமுறை விடப்படாததால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர் பலரும் ரெயின் கோட் அணிந்தும், குடைகள் பிடித்தும் பள்ளிகளுக்குச் சென்றனர்.
பெற்றோர் பலர் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. நான்சச் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வந்த குழந்தைகள், மழையில் நனைந்த நிலையில், பள்ளிக்கு பஸ்சில் ஏறி வந்துள்ளனர்.
மலை மாவட்டத்தில் காலை நேரங்களில் கன மழை நீடிக்கும் இடங்களுக்கு மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.