ADDED : செப் 24, 2026 05:51 PM

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி கிராம ஊராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய தீவிர துாய்மை பணியின் ஒரு பகுதியாக, குடிநீர் கிணறுகளில் குளோரினேஷன் செய்யும் முகாம் நடக்கிறது.
பாடகிரி பகுதியில் நேற்று நடந்த இம்முகாமை, ஏ.எஸ்.ஐ., பாபு தொடங்கி வைத்தார். நெல்லியாம்பதி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் ஜாய்சன் தலைமை வகித்தார். இளநிலை சுகாதார ஆய்வாளர்கள் அப்சல், சைனு சன்னி, சரண் ராம் ஆகியோர் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
இப்பணியின் வாயிலாக, நெல்லியாம்பதிக்குட்பட்ட பாடகிரி, காரப்பாறை, தொட்டேக்காடு, ராஜாக்காடு, புல்லாலா, ஓரியண்டல், லில்லி, நுாறடி, போத்துப்பாறை, மீராபுளோரா, கூனம்பாலம், ஏலக்காய் ஸ்டோர், தேனிப்பாடி, கைகாட்டி, ஆரஞ்சு பண்ணை, புலையம்பாறை, ஊத்துக்குழி, சீதார்குண்டு, கோட்டையங்காடு, சந்திராமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள, குடிநீர் ஆதாரங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு குளோரின் கலக்கப்பட்டது.
இப்பணியில், சுகாதார துறையினருடன் இணைந்து, வார்டு உறுப்பினர் சுரேஷ், தன்னார்வலர் ராமர் ஆகியோர் களப்பணியாற்றினர்.
