/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேவாலயங்களில் ஈஸ்டர் விழா திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
/
தேவாலயங்களில் ஈஸ்டர் விழா திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தேவாலயங்களில் ஈஸ்டர் விழா திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தேவாலயங்களில் ஈஸ்டர் விழா திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 21, 2025 05:00 AM
ஊட்டி : ஊட்டியல் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஈஸ்டர் என்னும் இயேசுவின் உயிர்ப்பு பெரு விழா உலகம் முழுவதும், கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி இருதய ஆண்டவர் பேராலயத்தில், ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் பங்கேற்று இரவு திருப்பலியை நிறைவேற்றினார். அதில், பங்கு தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்குத்தந்தை இமானுவேல் உள்ளிட்டோர் திருப்பலியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, அனைவருக்கும் மெழுகுதிரி வழங்கப்பட்டு ஏற்றப்பட்டது. இரவு திருப்பலியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். இதேபோல, மேரீஸ் தேவாலயம், தெரசன்னை தேவாலயம் உட்பட ஊட்டியில் உள்ள சுற்றுப்புற தேவாலாயங்களில் ஈஸ்டர் திருப்பலி நடந்தது.