/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிறிஸ்துமஸ் ஸ்டார்; அலங்கார பொருட்கள் விற்பனை
/
கிறிஸ்துமஸ் ஸ்டார்; அலங்கார பொருட்கள் விற்பனை
ADDED : டிச 23, 2024 04:45 AM

ஊட்டி, : கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி, ஊட்டியில் ஸ்டார் அலங்கார பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
கிறிஸ்துமஸ் விழா, 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஊட்டியில் ஸ்டார் அலங்கார தோரணங்கள், பரிசு பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.
ஊட்டியில் வீடுகள், கடைகள் ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில் அலங்காரங்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்டப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறக்கும் வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசலிலும் ஸ்டார் அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன.
பலர் நண்பர்கள், உறவினர்கள், சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்.
ஊட்டியில் உள்ள கடைகளில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

