/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை குழியில் ஜல்லி கற்களை கொட்ட நடவடிக்கை; லாரியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

ADDED : அக் 21, 2024 11:14 PM

பந்தலுார் : பந்தலுார் பஜார் சாலையில் உள்ள குழிகளில், ஜல்லிக்கற்களை கொட்ட வந்த நெடுஞ்சாலை துறை வாகனத்தை பொதுமக்கள் திருப்பி அனுப்பினர்.
பந்தலுார் பஜார் பகுதி சாலை முழுமையாக பெயர்ந்து குழிகளாக மாறி போக்குவரத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை சீரமைக்க பல்வேறு தரப்பினரும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், நெடுஞ்சாலை துறையினர் செவிசாய்க்க மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலையில் உள்ள குழிகளில், மீன்பிடிக்கும் நுாதன போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நேற்று மதியம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், லாரியில் ஜல்லிக்கற்கள் மற்றும் பாறைத்துகளை எடுத்து வந்தனர். பஜார் பகுதியில் உள்ள சாலையில் உள்ள குழிகளில் இவற்றை கொட்டி நிரப்பும் பணியில் ஈடுபட முயன்ற போது. பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, 'சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்; தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ள கூடாது,' என, தெரிவித்து, ஜல்லி மற்றும் பாறைத்துகளை ஏற்றி வந்த லாரிகளை திருப்பி அனுப்பினர்.
மக்கள் கூறுகையில், 'ஏற்கனவே நான்கு முறை இதே முறையில் நெடுஞ்சாலைத்துறையினர், ஜல்லிக்கற்களை கொட்டி அது வீணாகி போனது. மூன்று மாநில வாகனங்கள் செல்லும் இந்த முக்கிய சாலையில் தரமான பணி நடந்தால் மட்டுமே இங்கு பணி மேற்கொள்ள விடுவோம்,' என்றனர்.