ADDED : நவ 12, 2026 07:22 PM
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில், 485 தேர்வர்கள் குடிமை பணிகள் தேர்வு எழுதுகின்றனர்.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமை பணிகள் தேர்வு (டிப்ளோமா, ஐ.டி.ஐ - கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு) நடந்து வருகிறது.
அதன்படி, இன்று (13 தேதி) பிற்பகல், 22ம் தேதி காலை, 23ம் மற்றும் 24ம் தேதி காலை மற்றும் பிற்பகலில் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், 242 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
அதேபோல, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், 15ம் தேதி காலையில், 243 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த தேர்வை கண்காணிக்க, டி.என்.பி.எஸ்.சி., அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு எழுத வரும் தேர்வர்கள், காலை, 9:00 மணிக்குள்ளும், பிற்பகல், 2:00 மணிக்குள்ளும் தேர்வுக் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனை கண்காணிக்க, காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு எழுத வரும் எவரேனும் ஆள்மாறட்டம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
