/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதையுடன் கூடிய களிமண் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு
/
விதையுடன் கூடிய களிமண் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு
விதையுடன் கூடிய களிமண் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு
விதையுடன் கூடிய களிமண் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு
ADDED : ஆக 24, 2025 11:13 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர், களிமண் மற்றும் விதைகளை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இயற்கை மீது கொண்ட ஆவலால் தனது மூன்று வயது மகனை கொண்டு, 300 மரக்கன்றுகள் நடவு செய்து சாதனையாளர் புத்தகங்களில் குழந்தையின் பெயரை இடம் பிடிக்க செய்துள்ளார். தற்போது, விநாயகர் சதுர்த்திக்காக களிமண்ணில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார்.
விநாயகரின் கண் மற்றும் மூக்கு பகுதிகளில் மஞ்சாடி கொட்டை எனும் விதையையும், பிற இடங்களில் நவதானியங்களையும் சேர்த்து உருவங்களை உருவாக்கி வருகிறார்.
சங்கீதா கூறுகையில், ''பழங்காலத்தில் அனைத்து சிலைகளும் களிமண்ணால் உருவாக்கப்பட்டன. அதிலும், குறிப்பாக விநாயகர் சிலைகள் களிமண்ணில் மட்டும் உருவாக்கப்பட்டது.
காலபோக்கில் அதில் வண்ணம், ராயானம் கலந்து சிலைகள் செய்யப்பட்டதால், விசர்ஜனத்தின் போது நீர்நிலைகள்; அதில் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மீண்டும் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. நான் களிமண் மட்டுமின்றி வெட்டிவேர், வடு மாங்காய் கொட்டைகள், மண்கல் மூலமும் சிலைகள் உருவாக்கி வருகிறேன். வண்ணங்களை சேர்க்க பல்வேறு பூக்களை கொதிக்க வைத்து, எலுமிச்சம்பழம் மற்றும் மஞ்சள் துாள் கலந்து இயற்கையான நிறங்களை உருவாக்கி உள்ளேன்,'' என்றார்.