/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ மைய பகுதியில் துாய்மை விழிப்புணர்வு பைக் பேரணி
/
ராணுவ மைய பகுதியில் துாய்மை விழிப்புணர்வு பைக் பேரணி
ராணுவ மைய பகுதியில் துாய்மை விழிப்புணர்வு பைக் பேரணி
ராணுவ மைய பகுதியில் துாய்மை விழிப்புணர்வு பைக் பேரணி
ADDED : செப் 20, 2024 09:58 PM
குன்னுார் : குன்னுார் ராணுவ மைய பகுதியில், 'துாய்மை இந்தியா' விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் கடந்த, 4 நாட்களாக 'ஸ்வச்தா ஹி சேவா' பிரசாரம் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
நேற்று, ராணுவ பீல்டு மார்ஷல் மானெக்ஷா பிரிட்ஜ் பகுதியில் சுகாதார விழிப்புணர்வு பைக் பேரணி துவங்கியது. கன்டோன்மென்ட் வாரிய நியமன உறுப்பினர் ஸ்ரீபா, முன்னாள் உறுப்பினர் சிவக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பைக் பேரணி பேரக்ஸ் ராணுவ மையம், போர் நினைவு சதுக்கம் வழியாக 'சப்ளை டிப்போ' பகுதியை சென்றடைந்தது. கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித், பாபாசாகிப் லோட்டே உட்பட கன்டோன்மென்ட் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் பைக்குகள் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை கன்டோன்மென்ட் வாரிய சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, பூரணி உட்பட ஊழியர்கள் செய்திருந்தனர்.