/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பனியால் மாறுபடும் காலநிலை; பயிர் பாதுகாப்பு பணி துரிதம்
/
பனியால் மாறுபடும் காலநிலை; பயிர் பாதுகாப்பு பணி துரிதம்
பனியால் மாறுபடும் காலநிலை; பயிர் பாதுகாப்பு பணி துரிதம்
பனியால் மாறுபடும் காலநிலை; பயிர் பாதுகாப்பு பணி துரிதம்
ADDED : நவ 24, 2024 11:05 PM
கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் மேக மூட்டத்துடன், குளிரான கால நிலை நிலவுவதால் பாதிப்பு அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், நவ., தொடங்கி, டிச., வரை உறைப்பனி தாக்கம் அதிகமாக இருக்கும். வழக்கத்திற்கு மாறாக, பகல் நேரத்தில் மேக மூட்டம், இரவு நேரத்தில் நீர்பனி என, மாறி, மாறி நிலவும் காலநிலை தற்போது நிலவுகிறது.
கோத்தகிரி கோடநாடு, கூக்கல் தொறை, கட்டபெட்டு மற்றும் கீழ் கோத்தகிரி பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.
காய்கறி மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு உகந்ததாக இல்லை. இனிவரும் நாட்களில் உறைப்பனி தொடரும் பட்சத்தில், பயிர்களுக்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், விவசாய பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நெருப்பு மூட்டி குளிர் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. 'நடப்பாண்டு, பனியின் தாக்கம் அதிகரிக்கும்,' என, வானிலை மையம் தெரிவித்துள்ளதால், கூடுமானவரை, பயிர்களை பாதுகாக்கும் பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.