தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குப்பை கொட்டும் இடமாக மாறிய மூடப்பட்ட பள்ளி மைதானம்

குப்பை கொட்டும் இடமாக மாறிய மூடப்பட்ட பள்ளி மைதானம்

குப்பை கொட்டும் இடமாக மாறிய மூடப்பட்ட பள்ளி மைதானம்


ADDED : செப் 04, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 06:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னூர்: குன்னூர் ஆழ்வார்பேட்டை பகுதியில் மூடப்பட்ட நகராட்சி துவக்க பள்ளி மைதானம், குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விபரங்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில் சேகரித்து, 85 அரசு துவக்க பள்ளிகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் கடந்த ஆண்டு அக்., மாதம் குன்னூர் காரன்வால் சாலை, ஆழ்வார்பேட்டை நகராட்சி துவக்க பள்ளி மூடப்பட்டது. தலைமையாசியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். 4 மாணவர்கள் அட்டடி பள்ளிக்கு சேர்க்கப்பட்டனர். பள்ளியின் பெஞ்ச், டேபிள், சேர், ஸ்டவ், சமையல் பாத்திரங்கள், கம்ப்யூட்டர் உட்பட அனைத்து பொருட்களும் அட்டடி நடுநிலை பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன.

தற்போது பள்ளி பூட்டப்பட்ட நிலையில், அருகில் உள்ள மைதானம் குப்பைகள் கொட்டும் இடமாகவும், வாகன பார்க்கிங் இடமாகவும் மாறி உள்ளது.

இது தொடர்பாக கவுன்சிலர் உமாராணி கூறுகையில் , கட்டடங்கள் பாதிப்படைவதுடன் மைதானமும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நகராட்சி கூட்டத்தில் இதனை சீரமைக்கவும், பள்ளியாக செயல்படுத்துதல் அல்லது மாற்று பயன்பாடுகளுக்கு பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. எனினும் தீர்வு காணவில்லை , என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us