/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
50 ஆண்டு காலம் செயல்பட்ட அரசு பள்ளி மூடல்; பழங்குடியின கிராமங்களில் பெற்றோர் அதிருப்தி
/
50 ஆண்டு காலம் செயல்பட்ட அரசு பள்ளி மூடல்; பழங்குடியின கிராமங்களில் பெற்றோர் அதிருப்தி
50 ஆண்டு காலம் செயல்பட்ட அரசு பள்ளி மூடல்; பழங்குடியின கிராமங்களில் பெற்றோர் அதிருப்தி
50 ஆண்டு காலம் செயல்பட்ட அரசு பள்ளி மூடல்; பழங்குடியின கிராமங்களில் பெற்றோர் அதிருப்தி
ADDED : அக் 23, 2024 09:57 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே, 50 ஆண்டு காலம் செயல்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பற்றாக்குறையால் மூடப்பட்டதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் படிக்க ஏதுவாக, பழங்குடியினர் நலத்துறை சார்பில், 29 அரசு பள்ளிகளும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 7- அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி, இரண்டு அரசு நடுநிலைப்பள்ளிகள், நான்கு அரசு துவக்கப்பள்ளிகள் செயல்பட்டு வந்தது.
அதில், பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரசு துவக்கப்பள்ளி கடந்த, 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் ஆரம்பத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், படித்து வந்த நிலையில் கல்வித்துறையின் கவனக்குறைவால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. ஆசிரியர்களும் மாணவர்கள் சேர்க்கையில் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், கிராமங்களை சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை கையுன்னி அரசு ஆரம்ப பள்ளி மற்றும் அதனை ஒட்டிய தனியார் பள்ளிகளில் சேர்த்தனர். காலப்போக்கில், இந்த பள்ளியில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
50 ஆண்டு கால பள்ளி மூடல்
நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு மாணவிகள், இரண்டு மாணவர்கள் என நான்கு பேருடன் மட்டுமே செயல்பட்டு வந்தது. இங்கு பொறுப்பாசிரியர் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் கையுன்னியில் செயல்படும், அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டதால், 50 ஆண்டுகாலம் செயல்பட்ட இந்த பள்ளி மூடப்பட்டது. இப்பகுதியை சுற்றி உள்ள பழங்குடியின பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பழங்குடியின பெற்றோர் கூறுகையில், 'இங்கு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் துவக்கப்பள்ளி செயல்பட்டபோதும், பழங்குடியின மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது பள்ளி மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற பழமையான பள்ளிகளை மூடினால், பழங்குடியின மாணவர்கள் பிற இடங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டாமல் கல்வி பாதிக்கப்படும். இதனால், இந்த பள்ளியை மீண்டும் திறந்து பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,' என்றனர்.