தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆற்று பாலங்களுக்கு அடியில் குவிந்த துணி மூட்டை: பருவ மழை தீவிரமடைந்த நிலையில் பேரிடர் அபாயம்

ஆற்று பாலங்களுக்கு அடியில் குவிந்த துணி மூட்டை: பருவ மழை தீவிரமடைந்த நிலையில் பேரிடர் அபாயம்

ஆற்று பாலங்களுக்கு அடியில் குவிந்த துணி மூட்டை: பருவ மழை தீவிரமடைந்த நிலையில் பேரிடர் அபாயம்


UPDATED : அக் 21, 2026 01:55 PM

ADDED : அக் 21, 2026 01:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 01:55 PM ADDED : அக் 21, 2026 01:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் ஆற்றில் பாலங்களில் துணி முட்டைகள் உட்பட கழிவுகள் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் பேரிடர் அபாயம் உள்ளது.

குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 18-வது மற்றும் 26-வது வார்டுகளுக்கு இடைப்பட்ட ஆற்று பகுதியான குமரன் நகர் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதிகளில், கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக அடித்து வரப்பட்ட துணிக் கழிவு மூட்டைகள் ஆற்று பாலங்களின் கீழ் சிக்கி அடைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால், வரவிருக்கும் மழை காலத்தில் நீர் தடையின்றி செல்ல முடியாமல் பேரிடர் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இப்பகுதி பாலங்களின் கீழ் கழிவுகள் தேங்கி கிடப்பதால் நீர் வழித்தடம் அடைபட்டுள்ளது.

பலத்த மழை பெய்யும் போது வெள்ள பெருக்குடன் பாறாங்கற்கள் பெயர்ந்து உருண்டு பேரிடர் அபாயம் நிலவுகிறது. ஆற்று பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த ஒரு இடத்தில் நிரந்தர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், தற்காலிகமாக மூட்டைகள் மட்டுமே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த அடைப்புகளை உடனடியாக அகற்ற கோரி பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமூக தன்னார்வலர் முபாரக் கூறுகையில், ‘‘இப்பகுதியில் ஆற்றில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் பருவமழை மற்றும் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்ட போதும், பல நாட்கள் ஆகியும் நகராட்சியின் மெத்தன போக்கால் இப்பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளது. பருவமழை தீவிரமடைவதற்குள் அசம்பாவிதங்களை தவிர்க்க, போர்க்கால அடிப்படையில் ஆற்றில் உள்ள துணி மூட்டைகள் அகற்றி தூர்வார வேண்டும், ஆற்றில் துணி மூட்டைகளை போடுவதை தடுக்க வேண்டும்,’’என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us