/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சூட்டிங் மட்டத்தில் மேக மூட்டம்; சுற்றுலா பயணிகள் கூட்டம்
/
சூட்டிங் மட்டத்தில் மேக மூட்டம்; சுற்றுலா பயணிகள் கூட்டம்
சூட்டிங் மட்டத்தில் மேக மூட்டம்; சுற்றுலா பயணிகள் கூட்டம்
சூட்டிங் மட்டத்தில் மேக மூட்டம்; சுற்றுலா பயணிகள் கூட்டம்
ADDED : ஏப் 06, 2025 09:34 PM

ஊட்டி; ஊட்டி சூட்டிங்மட்டத்தில், மேகமூட்டமான காலநிலையிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
ஊட்டி -கூடலுார் சாலையில், 9வது மைல் சூட்டிங்மட்டம் பகுதி, திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உகந்ததாக உள்ளது.
வனத்துறைக்கு சொந்தமான இப்பகுதி, மழை காரணமாக, பசுமையாக காட்சியளிக்கிறது. இங்கு, தோடர் பழங்குடியின மக்களின் சூழல் சுற்றுலா மையம் செயல்படுகிறது.
தோடர் மக்களின் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் மந்தமான காலநிலையிலும் குதுாகலத்துடன் இயற்கை காட்சிகளை கண்டுக்களித்து வருகின்றனர்.