/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேக மூட்டமான காலநிலை; சுற்றுலா பயணிகள் 'குஷி'
/
மேக மூட்டமான காலநிலை; சுற்றுலா பயணிகள் 'குஷி'
ADDED : அக் 13, 2024 10:00 PM

பந்தலுார்: பந்தலுார் பகுதியில் சாரல் மழை மற்றும் மேகமூட்டம் ஆகிய காலநிலை நிலவி வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,
பந்தலுார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து, கடந்த சில நாட்களாக வெயிலான காலநிலை நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, 'காலையில் வெயில், மதியம் லேசான சாரல் மழை, தொடர்ந்து மேகமூட்டம்,' என, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் உள்ளூர் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனினும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து, நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள், இந்த இதமான காலநிலையை ரசித்து செல்கின்றனர்.
இப்பகுதி சாலையில் இறங்கி, 'மேக மூட்டத்துடன் நின்று 'செல்பி' எடுப்பது, தேயிலை தோட்டங்களை ரசித்து புகைப்படம் எடுத்து செல்வது,' என, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'பந்தலுார் பகுதியில், சாலை ஓரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில், காலநிலையை ரசிப்பதற்காக சாலைகளில் வாகனங்களை நிறுத்தி, இறங்கி நடப்பது மற்றும் 'செல்பி' எடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.