/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் கோடையில் பூத்து குலுங்கும் காபி மலர்கள்
/
பந்தலுாரில் கோடையில் பூத்து குலுங்கும் காபி மலர்கள்
பந்தலுாரில் கோடையில் பூத்து குலுங்கும் காபி மலர்கள்
பந்தலுாரில் கோடையில் பூத்து குலுங்கும் காபி மலர்கள்
ADDED : மார் 12, 2024 11:27 PM

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் கோடை காலத்தில் பூத்துக்குலுங்கும், காபி பூக்கள் காயாக மாறுமா என்ற, சந்தேகத்தில் விவசாயிகள் உள்ளனர்.
கூடலுார், பந்தலுாரில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்ததாக காபி விவசாயத்தில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
'ரொபஸ்டா, அரபிக்கா' வகை காபி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான தோட்டத்தில் 'ரொபஸ்டா' வகை காபி விவசாயம் அதிகளவில் உள்ளது.
காபி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக, கூடலுார் மற்றும் வயநாடு பகுதியில் காபி வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
ஏப்., மே மாத துவக்கத்தில் பூக்கள் பூத்து , பருவமழையால் காபி காய்களாக மாறி, டிச., ஜன., மாதங்களில் அறுவடை செய்யப்படும்.
இடைப்பட்ட காலத்தில் கவாத்து செய்தல், பராமரிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர். ஆனால், தற்போது காபி அறுவடை முடிந்த உடனே, காபி செடிகளில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளது.
பூக்கள் காயாக மாற ஈரப்பதம் தேவைப்படும் நிலையில், இப்போது காணப்படும் கொளுத்தும் கோடை வெயிலில் பூக்கள் காய்ந்து உதிர்ந்து விடும். இதனால், காபி விவசாயிகளுக்கு பயன் இருக்காது.
விவசாயிகள் கூறுகையில்,' காலநிலை மாற்றத்தால் காபி பூக்க காலதாமதம் ஆகும் நிலையில், நடப்பாண்டு காபி விளைச்சல் குறைய வாய்ப்புள்ளது,' என்றனர்.

