/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறுவடைக்கு முன் பூத்து குலுங்கும் காபி பூக்கள்: உதிர்வதால் விளைச்சல் குறைகிறது

ADDED : ஜன 14, 2024 11:39 PM

பந்தலுார்;பந்தலுார் பகுதியில் காபி அறுவடைக்கு முன், பூக்கள் பூத்து காணப்படுகிறது.
பந்தலுார் பகுதியில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்ததாக காபி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யப்படும், காபி அறுவடை தற்போது துவங்கி உள்ளது. அறுவடை செய்யப்பட்ட காபி பழங்கள் வெயிலில் உலர்த்தி பதப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், சமீபத்தில் பெய்த மழைக்கு அறுவடை செய்யப்பட்ட காபி பழங்கள் உலர்த்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன், காபி பழங்கள் செடிகளில் அறுவடைக்கு முன்னரே, பூக்கள் பூக்க துவங்கியுள்ளது. இதனால், அறுவடையின் போது, காபி பூக்கள் உதிர்ந்து வீணாகி விடும்.
பின், அடுத்த பருவ மழையின் போதுதான் காபி பூக்க துவங்கும். இதனால், தற்போது பூத்துக்குலுங்கும் காபி பூக்கள் வீணாக உதிர்ந்து வருவதால் நடப்பாண்டு காபி அறுவடையில் விளைச்சல் குறைய வாய்ப்புள்ளது.
இம் மாவட்டத்தில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பல ஏக்கரில் காபி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற, பகுதி களில் தேயிலை தோட்டங்களில் ஊடு பயிராக பயிரிட்டு வருகின்றனர். காபி பயிர் குறித்து காபி வாரியம் விவசாயிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.