/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடிந்த தடுப்புசுவர்: இடிபாடுகளை அகற்றவில்லை ஆய்வு செய்த கலெக்டரிடம் மக்கள் புகார்
/
இடிந்த தடுப்புசுவர்: இடிபாடுகளை அகற்றவில்லை ஆய்வு செய்த கலெக்டரிடம் மக்கள் புகார்
இடிந்த தடுப்புசுவர்: இடிபாடுகளை அகற்றவில்லை ஆய்வு செய்த கலெக்டரிடம் மக்கள் புகார்
இடிந்த தடுப்புசுவர்: இடிபாடுகளை அகற்றவில்லை ஆய்வு செய்த கலெக்டரிடம் மக்கள் புகார்
ADDED : நவ 08, 2024 10:43 PM
குன்னுார்; குன்னுார் ஸ்டேன்ஸ் பள்ளி சாலையில் இடிந்து விழுந்த தடுப்புசுவரின் இடிபாடுகளை அகற்றாத நிலையில், ஆய்வு மேற்கொண்ட கலெக்டரிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.
குன்னுாரில் பெய்த மழையினால் பல்வேறு இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
மழையால் பாதித்த பில்லுார்மட்டம், யானைப்பள்ளம் சாலையில், மணல் மூட்டைகளை அடுக்கி, தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய உலிக்கல் பேரூராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஸ்டேன்ஸ் பள்ளி சாலையில் இடிந்து விழுந்த பிரம்மாண்ட தடுப்புச்சுவர் பகுதியில் நடந்த ஆய்வின் போது, மக்களின் புகாரை அடுத்து, உடனடியாக இடிபாடுகளை அகற்ற, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''மாவட்டத்தில், 6 தாலுகாக்களில், மழையால் அதிக பாதிப்பு ஏற்படும், 283 பகுதிகள் கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைத்து, 24 மணி நேரமும் அரசு துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்.
பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க, 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் அச்சம் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள நிவாரண முகாம்களில் தங்கி கொள்ளலாம்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடையவேண்டாம்,பேரிடர் பாதிப்பு குறித்து, மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077 மற்றும் 0423--2450034, 2450035-க்கு தகவல் தெரிவிக்கலாம்,'' என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் கலெக்டர் சங்கீதா உட்பட அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.