/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காண கலெக்டர் அறிவுரை
/
மக்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காண கலெக்டர் அறிவுரை
மக்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காண கலெக்டர் அறிவுரை
மக்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காண கலெக்டர் அறிவுரை
ADDED : ஏப் 10, 2025 09:25 PM

பந்தலுார், ; பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில், மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் வரவேற்றார்.
அதில், பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், தங்கள் துறை சார்ந்த அரசியல் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினர்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் லட்சுமி திவ்யா தலைமை வகித்து பேசுகையில், ''மக்கள் அரசு துறை அதிகாரிகளை தேடி வந்து மனுக்கள் கொடுத்து தீர்வு காண ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், தற்போது அரசின் மூலம் மக்களை தேடி சென்று இதுபோன்ற முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று நடத்துகின்றனர்.
அதில், மக்களின் பல்வேறு குறைகளுக்கு தீர்வு காணப்படுவதுடன், ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மற்றும் தற்போது பெறப்படும் மனுக்கள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் உரிய தீர்வு காணப்படும்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளின் குறைகளை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம், தெரிவித்து தீர்வு காண முன் வரலாம். அதில், தீர்வு கிடைக்காவிட்டால் நேரில் என்னை சந்தித்தால் அது குறித்து உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 41 பயனாளிகளுக்கு, 74 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். தாசில்தார் சிராஜுநிஷா நன்றி கூறினார்.

