ADDED : ஜன 03, 2024 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுார் தாலுகா அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு வாக்காளர்களின் விபரங்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
வாக்காளர் பட்டியலில் ஒரே மாதிரியான புகைப்படங்கள் உள்ள வாக்காளர்கள், மற்றும் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கும் பணியில், தேர்தல் பிரிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணியை கலெக்டர் கிராந்தி குமார் நேற்று ஆய்வு செய்தார். 18 வயது பூர்த்தி அடைந்தோர் எத்தனை பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என, கேட்டறிந்தார்.
சூலுார் தாசில்தார் நித்திலவல்லி, துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு)பாலாஜி, மண்டல துணை தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.