தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பதட்டமான ஓட்டு சாவடிகள் கலெக்டர், எஸ்.பி., ஆய்வு

 பதட்டமான ஓட்டு சாவடிகள் கலெக்டர், எஸ்.பி., ஆய்வு

 பதட்டமான ஓட்டு சாவடிகள் கலெக்டர், எஸ்.பி., ஆய்வு


ADDED : பிப் 19, 2026 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 07:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே உள்ள பதட்டமான ஓட்டு சாவடிகளில், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பந்தலுார் தாலுகாவில் நெல்லியாளம் நகராட்சி, சேரங்கோடு மற்றும் நெலக்கோட்டை ஊராட்சி பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில், 32 ஓட்டு சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

அதில், சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரங்கோடு, கண்ணம்வயல், மண்ணாத்திவயல், மராடி, எருமாடு, கக்குண்டி, அய்யன்கொல்லி பகுதிகளில் உள்ள, ஓட்டு சாவடி மையங்களில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி.நிஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதில், ஓட்டு சாவடி மையங்களில், வாக்காளர்கள் வந்து செல்ல வசதிகள், அருகிலுள்ள கிராமங்களின் விவரங்கள், குடிநீர், மின்சாரம், மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல வசதிகள், பாதுகாப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

வசதிகள் இல்லாத ஓட்டு சாவடி மையங்களில், வாக்காளர்கள் சிரமப்படாமல் வந்து, ஓட்டு போட்டு செல்லும் வகையில் வசதிகள் ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழக எல்லை பகுதியான கக்குண்டி அரசு பள்ளி ஓட்டு சாவடி மையத்தை, மாதிரி ஓட்டு சாவடி மையமாக மாற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின் போது, கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், தாசில்தார், சிராஜூநிஷா, டி.எஸ்.பி., கல்யாணகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் சக்கீர், வருவாய் ஆய்வாளர் சிவகுமார், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us