/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு வழிகாட்டுதல் படி மாணவர் சேர்க்கை கல்லுாரி முதல்வர் தகவல்
/
அரசு வழிகாட்டுதல் படி மாணவர் சேர்க்கை கல்லுாரி முதல்வர் தகவல்
அரசு வழிகாட்டுதல் படி மாணவர் சேர்க்கை கல்லுாரி முதல்வர் தகவல்
அரசு வழிகாட்டுதல் படி மாணவர் சேர்க்கை கல்லுாரி முதல்வர் தகவல்
ADDED : ஜூன் 05, 2025 11:19 PM
கூடலுார், ; 'கூடலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், அரசு உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது,' என, கல்லுாரி முதல்வர் தெரிவித்தார்.
கூடலுாரில், 2003ல் துவக்கப்பட்ட பாரதியார் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் உறுப்பு கல்லுாரி, 2018-- 19ல் அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டது. 2022 -23 ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லுாரியில், 1000 மாணவர்கள் படித்து வந்தனர். அப்போது, வெளியூரில் இருந்து விண்ணப்பித்த மாணவர்கள் வரவில்லை எனில், உள்ளூர் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இம்முறை பின்பற்றப்பட வில்லை. இதனால், பல உள்ளூர் மாணவர்கள் தனியார் கல்லுாரியில் சேர்ந்துவிட்டனர். மாணவர் சேர்க்கையில், 40 சதவீதம் குறைந்தது.
நடப்பு ஆண்டு இக்கல்லுாரியில் சேர்வதற்காக, 5,000 மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். நேற்று முன்தினம் மாணவர் சேர்க்கை துவங்கியது. இதுகுறித்து மாணவர்களுக்கும் முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து நடந்த கலந்தாய்வில், 138 மாணவர்கள் கல்லுாரியில் சேர்த்து கொள்ளப்பட்டனர்.
கல்லுாரி முதல்வர் சுபாஷினி கூறுகையில், ''கல்லுாரியில் அரசு வழிகாட்டுதல் படி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேற்று (நேற்று முன்தினம்) 400 மாணவர்கள் கல்லுாரியில் சேர்வதற்காக வந்திருந்தனர். அரசின் வழிகாட்டுதல் பின்பற்றி, 200 பேர் கல்லுாரியில் சேர அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அரசு வழிகாட்டுதல்படி இப்பகுதியில் அதிகளவில் மாணவர் சேர்க்கை நடைபெறும்,'' என்றார்.