/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பல்லுயிரிகளின் ஓவிய கண்காட்சி கல்லுாரி மாணவர்கள் வியப்பு
/
பல்லுயிரிகளின் ஓவிய கண்காட்சி கல்லுாரி மாணவர்கள் வியப்பு
பல்லுயிரிகளின் ஓவிய கண்காட்சி கல்லுாரி மாணவர்கள் வியப்பு
பல்லுயிரிகளின் ஓவிய கண்காட்சி கல்லுாரி மாணவர்கள் வியப்பு
ADDED : பிப் 13, 2025 09:20 PM

கூடலுார், ;கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த 'இயற்கையை காக்கும் பல்லுயிர்கள்' குறித்த ஓவிய கண்காட்சி மாணவர்களை கவர்ந்தது.
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இயற்கையை காக்கும் பல்லுயிரிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஓவிய கண்காட்சி நேற்று நடந்தது. உதவி பேராசிரியர் மகேஸ்வரர் வரவேற்றார். விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வணிக மேலாண்மை துறை தலைவர் அவிநாஷ் தலைமை வகித்து பேசினார்.
புளூ மவுண்டன் ரோட்டரி கிளப் தலைவர் யாசின் ஷெரிப், செயலாளர் அலெக்சாண்டர், ரெப்கோ வங்கி முதன்மை மேலாளர் ரங்கராஜ், நெல்லியாளம் நகர மன்ற கவுன்சிலர் சேகர் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, இயற்கை பாதுகாக்கும் நுண்ணுயிர்கள் குறித்து, நாடுகாணி ஜீன் பூல் தாவர மைய வனச்சரகர் வீரமணி, தாவர ஆய்வாளர் சுந்தரேசன் விளக்கினர். ஈரநிலம் அமைப்பின் நிறுவனர் மற்றும் ஓவியரின் பல்லுயிர்கள் குறித்த ஓவிய கண்காட்சி நடந்தது. மாணவர்கள் கண்காட்சி கண்டு ரசித்தனர். இயற்பியல் துறை தலைவர் அர்ஜூணன் நன்றி கூறினார்.
ஓவியர் தமிழரசன் கூறுகையில், ''இயற்கை காக்கும் பல்லுயிர்கள் குறித்த ஓவிய கண்காட்சி, இப்பகுதியில் நடத்துவதன் மூலம், வனம் சார்ந்து வாழும் இப்பகுதி மாணவர்கள் பல்லுயிர்கள் பாதுகாப்பது அவசியம் குறித்து எளிதாக தெரிந்து கொண்டு, அதனை பாதுகாக்க முன் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

