/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஈர நிலங்களை பாதுகாக்க கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி
/
ஈர நிலங்களை பாதுகாக்க கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி
ஈர நிலங்களை பாதுகாக்க கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி
ஈர நிலங்களை பாதுகாக்க கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி
ADDED : பிப் 02, 2024 08:57 PM

கூடலுார்:முக்கூர்த்தி தேசிய பூங்காவில் 'ஈர நிலங்கள் பாதுகாப்பு' குறித்து வன ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
ஊட்டி முக்கூர்த்தி தேசிய பூங்காவில், சர்வதேச ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு, ஊட்டி அரசு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற 'ஈர நிலங்கள் பாதுகாப்பு' குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
முகாமுக்கு வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமை வகித்து, 'ஈர நிலங்களின் முக்கியத்துவம், அதனை பாதுகாப்பதன் அவசியம்,' குறித்து விளக்கினார். தொடர்ந்து தேசிய பூங்காவின் புல்வெளி நிலங்கள், சோலை வனங்கள் மற்றும் நீர் நிலைகளை முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர்.
வன ஊழியர்கள், கல்லுாரி உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.