/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; தி.மு.க., இளைஞரணி நிர்வாகி கோர்ட்டில் சரண்
/
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; தி.மு.க., இளைஞரணி நிர்வாகி கோர்ட்டில் சரண்
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; தி.மு.க., இளைஞரணி நிர்வாகி கோர்ட்டில் சரண்
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; தி.மு.க., இளைஞரணி நிர்வாகி கோர்ட்டில் சரண்
ADDED : ஜன 07, 2024 12:38 AM

கோத்தகிரி;நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்த 'வெல்டிங்' தொழிலாளி கணேஷ் மூர்த்தி. இவரது மனைவி மல்லிகா. இவர்களது இளைய மகள் ஸ்ரீநிதி, 21. கோவையில் ஒரு தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
புத்தாண்டு விடுமுறைக்கு கோத்தகிரிக்கு வந்த ஸ்ரீநிதி, கடந்த, 2ம் தேதி பெற்றோர் பணிக்கு சென்ற நிலையில், துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். போலீசார் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மாணவியின் தந்தை உட்பட, 30க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாலை, கோத்தகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, 'மாணவியின் தற்கொலைக்கு காரணமான, தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத் என்பவரை கைது செய்ய வேண்டும்,' என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றம் சுமத்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். புகாரை பெற்று கொண்டார். இதனால், அனைவரும் கலை சென்றனர். தொடர்ந்து, தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத் என்பவர் மீது, மாணவியை தற்கொலைக்கு துாண்டிய பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், வினோத் நேற்று மாலை, குன்னுார் சார்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை, 15 காவலில் சிறையில் அடைக்க, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்துல்சலாம் உத்தரவிட்டார்.