/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயிலை ரூ.4.98 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்த கல்லுாரி; சாதித்த பள்ளி மாணவர்கள் பயணம்

UPDATED : ஏப் 24, 2025 11:48 PM
ADDED : ஏப் 24, 2025 11:05 PM

குன்னுார்; மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, 4.98 லட்சம் ரூபாய் செலுத்தி, கட்டுரை போட்டியில் சாதித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்காக தனியார் கல்லுாரி நிர்வாகம் இலவச பயணத்துக்கு ஏற்பாடு செய்தது.
குன்னுார்- ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும், நுாற்றாண்டு பழமை வாய்ந்த, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற, மலை ரயிலில் பயணம் செய்ய, சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அவ்வப்போது, மலை ரயிலை தனியாக வாடகைக்கு எடுத்து பயணம் மேற்கொள்கின்றனர்.
இதேபோல, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கும் வாடகைக்கு எடுத்து ஊழியர்கள், மாணவ, மாணவிகளை மகிழ்வித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று கோவை நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், 4.98 லட்சம் ரூபாய் செலுத்தி, மலை ரயிலை வாடகைக்கு எடுத்து, 90 மாணவ, மாணவிகளை அழைத்து வந்தனர்.
டெபாசிட் தொகையாக தனியாக வசூலித்த, 1.20 லட்சம் ரூபாய் திரும்ப கல்லுாரிக்கு ரயில்வே நிர்வாகம் வழங்கியது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு செய்த இந்த கல்லுாரி, அவர்களை அழைத்து வந்தது.
பிளஸ்-2 தேர்வு முடித்து விடுமுறையில், இந்த வாய்ப்பு கிடைத்த மாணவ, மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர்.