ADDED : ஏப் 24, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி நகரில் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. ஆண்டு தோறும், மே மாதம் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏதுவாக, 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட, பல வண்ணங்களில் பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, வறட்சி நிலவுவதால், 'ஓஸ் பைப்' வாயிலாக மலர் நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. மலர் நாற்றுகள் தற்போது, படிப்படியாக மலர துங்கியுள்ளது. குறிப்பாக, பூங்காவில் நுழைவு வாயிலில், பல வண்ணங்களில் வண்ண மலர்கள் பூத்து குலுங்குவது, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
