/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாக்காளர்களுக்கான வண்ண அடையாள அட்டை தபாலில் வீடு தேடி செல்கிறது
/
வாக்காளர்களுக்கான வண்ண அடையாள அட்டை தபாலில் வீடு தேடி செல்கிறது
வாக்காளர்களுக்கான வண்ண அடையாள அட்டை தபாலில் வீடு தேடி செல்கிறது
வாக்காளர்களுக்கான வண்ண அடையாள அட்டை தபாலில் வீடு தேடி செல்கிறது
ADDED : பிப் 06, 2024 10:04 PM
ஊட்டி;நீலகிரியில் உள்ள வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை தபாலில் வீடு தேடி வர துவங்கி விட்டது.
கடந்த ஜன., 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர்களாக இணைப்பதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் கடந்த ஆண்டு அக்., துவங்கி டிச., மாதம் வரை நடந்தது.
அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, தொகுதி மாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. கடந்த ஜன., 22ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியானது.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய தொகுதிகளுக்கான இறுதி பட்டியலில் மூன்று தொகுதிகளில், 5 லட்சத்து 73 ஆயிரத்து 624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலில் 2,992 வாக்காளர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர்கள் ஒரே தொகுதிக்குள் இடமாற்றம்; வேறு தொகுதிக்கு மாற்றம்; வாக்காளர் அட்டையில் புகைப்படம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அதில், ஏற்று கொள்ளப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டது. மேலும், லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் பலர் பழைய கார்டுகளுக்கு பதில் ஆன்லைனில் புதிய வண்ண கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதன்படி, வாக்காளர்களின் அருகாமையில் உள்ள தபால் அலுவலகம் மூலம், ஸ்மார்ட் கார்டு வடிவிலான வண்ண வாக்காளர் அட்டை வாக்காளர்களின் வீடு தேடி செல்கிறது. நீலகிரியில் நேற்று முன்தினம் முதல், தபால்காரர்கள் வாக்காளர் அடையாள அட்டை பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றன.

