/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்வாய் பணி துவக்கம் ஒருவழி பாதையில் வாகனங்கள்
/
கால்வாய் பணி துவக்கம் ஒருவழி பாதையில் வாகனங்கள்
ADDED : பிப் 20, 2024 10:34 PM

ஊட்டி;ஊட்டி லோயர் பஜார் சாலையில் மறுப்புறம் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லோயர் பஜாரில் ஏராளமான வணிக நிறுவனம், குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடையுடன் இணைக்கும் வசதியாக ஏ.டி.சி., ரவுண்டானாவிலிருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை மூன்று இடத்தில் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது.
சாலையில், 15 அடி நீளம், 10 அடிக்கு ஆழத்தில் கால்வாய் அமைக்கும் பணியில் ஒருபுறத்தில் மேற்கொண்ட பணி தற்போது முடிந்த நிலையில், மறுப்புறம் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இப்பணியை ஒட்டி வாகனங்கள் ஒரு வழிபாதையாக திருப்பிவிடப்பட்டது.

