/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பா.ஜ., புகார்
/
நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பா.ஜ., புகார்
ADDED : பிப் 07, 2024 11:12 PM
அன்னூர் : அன்னூரில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டால் இடையூறு ஏற்படுகிறது என பா.ஜ., புகார் தெரிவித்துள்ளது.
அன்னூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் திருமூர்த்தி, மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில், உதவி பொறியாளர் சதாசிவத்திடம், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அன்னூரில், மேட்டுப்பாளையம் சாலையில், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கு ஏராளமான ஆட்டோக்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றால் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதே புகாரை அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் நித்யாவிடமும் தெரிவித்தனர். அப்போது பா.ஜ., மாவட்ட செயலாளர் ஜெயபால், விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார், வட்டார தலைவர் ரத்தினசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

