/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சந்தைக் கடையில் அநியாய சுங்க வசூல்: நகராட்சி கூட்டத்தில் புகார்
/
சந்தைக் கடையில் அநியாய சுங்க வசூல்: நகராட்சி கூட்டத்தில் புகார்
சந்தைக் கடையில் அநியாய சுங்க வசூல்: நகராட்சி கூட்டத்தில் புகார்
சந்தைக் கடையில் அநியாய சுங்க வசூல்: நகராட்சி கூட்டத்தில் புகார்
ADDED : மார் 14, 2024 11:08 PM

காரமடை:சந்தைக் கடையில் அநியாய சுங்க வசூல் வசூலிப்பதாக நகராட்சி கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் அவசரக் கூட்டம் நேற்று நகராட்சி தலைவர் உஷா தலைமையில், கமிஷனர் மனோகரன் முன்னிலையில் நடந்தது.
விக்னேஷ் (பா.ஜ.) : சந்தைக்கடையில் விவசாயிகளிடம் சுங்க கட்டணம் ரூ.5 டோக்கனுக்கு பதிலாக ரூ.50 வசூல் செய்யப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. யார் இதில் பலன் அடைகிறார்கள். ஏழை விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கட்டணங்கள் தொடர்பாக நகராட்சி சார்பில் வெளிப்படையாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இல்லையென்றால்் பா.ஜ., சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்படும். சந்தை கடையில் நேரம் மாற்றம் தேவை. கொரோனா காலக்கட்டத்தில் மாற்றப்பட்ட நேரத்தை மாற்றி மீண்டும் பழைய நேரத்திற்கே மாற்ற வேண்டும்.
கமிஷனர் மனோகரன் : சந்தை கடை தொடர்பாக, ஏற்கனவே கூட்டம் போட்டுள்ளோம். மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு பிரசனைகள் தீர்க்கப்படும்.
வனிதா ( அ.தி.மு.க.):காரமடை நகராட்சியில் அதிகாரிகள் உள்ளனரா? இல்லையா? பொது மக்கள் பிரச்னைக்காக போன் செய்தால் யாரும் எடுப்பதில்லை. டெண்டர் விடப்பட்டு ஒர்க் ஆர்டர் கொடுக்கப்பட்ட பணிகள் எதுவும் தொடங்கவில்லை. 2 ஆண்டுகளாக பல்வேறு பணிகளுக்கு போராடி வருகிறேன். எந்த நடவடிக்கையும் இல்லை.
செண்பகம் (தி.மு.க.): சந்தை கடைக்கு உட்பட்ட பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. உடனடியாக கழிவுகள் அகற்றப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருபிரசாத் (தி.மு.க.): காரமடை நகராட்சியில் பணியாற்ற 87 தூய்மை பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 157 தூய்மை பணியாளர்கள் வேண்டும். தூய்மை பணியாளர்களை அதிகம் பணிக்கு அமர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இக்கூட்டத்தில் 9 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

