/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரமில்லாத 'கான்கிரீட்' சாலை முதல்வருக்கு புகார் மனு
/
தரமில்லாத 'கான்கிரீட்' சாலை முதல்வருக்கு புகார் மனு
தரமில்லாத 'கான்கிரீட்' சாலை முதல்வருக்கு புகார் மனு
தரமில்லாத 'கான்கிரீட்' சாலை முதல்வருக்கு புகார் மனு
ADDED : மார் 18, 2024 12:27 AM
ஊட்டி;'ஊட்டி தேவர் சோலையில் 'கான்கிரீட்' சாலை தரம் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது,' என, புகார் எழுந்துள்ளது.
கிராம பிரமுகர் பூபதி ராஜா முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
ஊட்டி பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டு தேவர் சோலை பஜார் பகுதியில், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், தேவர் சோலை பகுதியில் இருந்து, காத்தாடி மட்டம் பிரதான சாலை வரை, ஒரு கி.மீ., தொலைவிற்கு, மண்சாலை 'கான்கிரீட்' சாலையாக அமைக்கப்பட்டது. பணி நிறைவடையவில்லை. மேலும், 700 மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்க வேண்டி உள்ளது.
இப்பணி நிறைவடையும் பட்சத்தில், பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள், 3 கி.மீ., செல்ல வேண்டிய நிலை இருக்காது. கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் சாலையின் துாரத்தை மேலும், 100 மீட்டர் வரை நீடிக்கும் பட்சத்தில், மக்கள் முழுமையாக பயனடைய வாய்ப்புள்ளது. தவிர, 70 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் சாலை பணி தரம் இல்லாமல் உள்ளது. தண்ணீர் ஊற்றி, 'கியூரிங்' செய்யப்படாமல் உள்ளதால், சாலையில் பல இடங்களில் பெரியளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை.எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாலையை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

