/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி விவசாயிகளின் பதிவு ;கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி துவக்கம்
/
நீலகிரி விவசாயிகளின் பதிவு ;கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி துவக்கம்
நீலகிரி விவசாயிகளின் பதிவு ;கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி துவக்கம்
நீலகிரி விவசாயிகளின் பதிவு ;கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி துவக்கம்
ADDED : பிப் 16, 2024 11:40 PM
ஊட்டி;முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளின் பதிவை, கணினி மயமாக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், 2011 திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட குடும்ப தலைவர்கள், 1 லட்சத்து, 39 ஆயிரத்து, 712 நபர்கள் உள்ளனர்.
அவர்களை சார்ந்துள்ள உறுப்பினர்களில், 1 லட்சத்து, 38 ஆயிரத்து, 329 நபர்கள் என, மொத்தம், 2 லட்சத்து, 78 ஆயிரத்து, 41 நபர்கள் உள்ளனர். இவர்களின் விபரங்கள், கிராம நிர்வாக அலுவலர்களால், பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அந்த நபர்களின், ஆதார் எண், ரேஷன் கார்டு எண், தொலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர்களின், ஆதார் எண், தொலைபேசி எண் ஆகிய அனைத்து விபரங்களையும் கம்யூட்டர் மயமாக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து விவசாயிகளும் தங்களுக்குரிய கிராம நிர்வாக அலுவலர்களிடம், நேரடியாக அனைத்து விபரங்களையும் வழங்கி பயனடையலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.