/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ் கதவு தானாக திறந்ததால் கண்டக்டர் காயம்
/
அரசு பஸ் கதவு தானாக திறந்ததால் கண்டக்டர் காயம்
ADDED : நவ 03, 2024 10:20 PM
பந்தலுார்; கூடலுார் நோக்கி சென்ற அரசு பஸ் கதவு தானாக திறந்து கொண்டதில், படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
கூடலுாரில் இருந்து பந்தலுார் மற்றும் குந்தலாடி வழியாக பாட்டவயல் மற்றும் அய்யன்கொல்லி பகுதிக்கு இரண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வழியாக ஏற்கனவே இயக்கப்பட்ட இரண்டு அரசு பஸ்களும், புதிய பாடி கட்டப்பட்டு தற்போது வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
அதனால், இந்த வழித்தடத்தில் இயக்க தகுதி இல்லாத இரண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நிற்பதுடன், பஸ்களை இயக்கம் டிரைவர்களும் சிரமப்பட்டு பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அய்யன்கொல்லி பகுதியில் இருந்து கூடலுார் நோக்கி சென்ற, பஸ்சின் கதவு திடீரென பால்மேடு என்ற இடத்தில் தானாக திறந்து கொண்டது. அப்போது, படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் கங்காதரன் என்பவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
அதில், அவரது தோள்பட்டை காயமடைந்த நிலையில், சுல்தான் பத்தேரி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பயணிகள் கூறுகையில், 'காலை அல்லது மாலை நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், பள்ளி கல்லுாரி மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பர். எனவே, போக்குவரத்து நிர்வாகம் இந்த வழித்தடத்தில் தரமான அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.