தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தாயகம் திரும்பிய தமிழர்கள் உரிமை மீட்பு மாநாடு

 தாயகம் திரும்பிய தமிழர்கள் உரிமை மீட்பு மாநாடு

 தாயகம் திரும்பிய தமிழர்கள் உரிமை மீட்பு மாநாடு


ADDED : பிப் 18, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரியில் தாயகம் திரும்பிய தமிழர்கள் உரிமை மீட்பு மாநாடு நடந்தது.

அகில இந்திய தாயகம் திரும்பிய முன்னேற்ற கழக தலைவர் தம்பி ராஜா தலைமை வகித்தார்.

மாநில குழு ஒருங்கிணைப்பாளர் தாமரைச்செல்வன், கூடலூர் எம்.எல்.ஏ., ஜெயசீலன் ஆகியோர் மாநாட்டை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், எழுத்தாளர் தமிழழகன் எழுதிய, 'தாயகம் திரும்பியோரின் வலிகளின் வரிகள்,' என்ற நுாலை தமிழ் வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., வேல்முருகன் வெளியிட, இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ''சாஸ்திரி ஒப்பந்தம்படி, இலங்கையில் இருந்து 5 லட்சம் தமிழர்கள் தமிழகத்திற்கு வந்த நிலையில், தற்போது மாநிலத்தில், 25 லட்சம் பேர் வாழ்கின்றனர். நிலையில், நீலகிரியில், இரண்டரை லட்சம் பேர் வாழ்கின்றனர்.

தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான நிலத்தில் தலா. இரண்டு ஏக்கர் நிலத்தை பிரித்து வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கு இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களின் இந்த கோரிக்கைகள் மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், இலங்கை எம்.பி., அடிக்கநாதன், தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, தாயகம் திரும்பிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

நிர்வாகி சத்திய சிவன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தாயகம் திரும்பிய தமிழர்கள் உரிமை மீட்பு குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us