/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்: ரூ.6,000 அபராதம்
/
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்: ரூ.6,000 அபராதம்
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்: ரூ.6,000 அபராதம்
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்: ரூ.6,000 அபராதம்
ADDED : நவ 22, 2024 11:27 PM

கூடலுார்: கூடலுார் நகராட்சி அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பயன்படுத்திய கடைகளுக்கு, 6000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், 21 வகையான 'பிளாஸ்டிக்' பொருட்கள், ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு துறை அதிகாரிகள் வணிக நிறுவனங்கள், கடைகளில் அடிக்கடி சோதனை செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்த அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், மாவட்ட எல்லைகள் உள்ள சோதனை சாவடிகளில், நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்து வருகின்றனர். தொடர் நடவடிக்கையின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவு குறைந்து வருகிறது. எனினும், சுற்றுலா பயணிகளால், பிளாஸ்டிக் பைகள் புழக்கம் இருந்து வருகிறது.
இதனை பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் வகையில் அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் சோதனை செய்கின்றனர்.
இந்நிலையில், கூடலுார் நகராட்சி கமிஷனர் சுவீதாஸ்ரீ மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம், மாலை, கூடலுார் நகரில் உள்ள சில கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில் இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்து, 6000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். கடைகளில், மேற்கொள்ளப்படும் சோதனையின் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.