/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை வஸ்து பறிமுதல்; கூடலுாரில் ஒருவர் கைது
/
போதை வஸ்து பறிமுதல்; கூடலுாரில் ஒருவர் கைது
ADDED : அக் 27, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுாரில் தடை செய்யப்பட்ட போதை வஸ்து வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவில் இருந்து, புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிபடை போலீசார் நேற்று பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த, முருகன், 60, என்பவரை, சோதனை செய்தபோது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட, 45 போதை வஸ்து பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விற்பனை செய்வதற்காக கர்நாடகாவில் இருந்து, கூடலுாருக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர்.