/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சந்தன கட்டை பறிமுதல்; பாலக்காட்டில் ஒருவர் கைது
/
சந்தன கட்டை பறிமுதல்; பாலக்காட்டில் ஒருவர் கைது
ADDED : மார் 13, 2024 10:21 PM

பாலக்காடு : பாலக்காடு அருகே, அனுமதி இன்றி வைத்திருந்த, 2.906 டன் சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு எஸ்.பி., ஆனந்த்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒற்றப்பாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்ஷாதின் தலைமையிலான போலீசார், பாவுக்கோணம் என்ற இடத்தில் வாடானாம்குறுச்சியை சேர்ந்த ஹசன், 46, என்பவரின், பழைய இரும்பு கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது, அனுமதி இன்றி வைத்திருந்த, 2,906 டன் சந்தன கட்டையை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. ஹசனை கைது செய்து விசாரித்த போது, கடையில் சந்தன கட்டை வியாபாரம் செய்வதும், பறிமுதல் செய்த சந்தன கட்டைகள் வனத்தில் இருந்து கடத்தி வந்தவை என்பதும் தெரியவந்தது.
இச்சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என, போலீசார் விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்த சந்தன கட்டையை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

