/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டிக்கு கொண்டு வரப்படும் டில்லி கேரட் :கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால் குழப்பம்
/
ஊட்டிக்கு கொண்டு வரப்படும் டில்லி கேரட் :கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால் குழப்பம்
ஊட்டிக்கு கொண்டு வரப்படும் டில்லி கேரட் :கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால் குழப்பம்
ஊட்டிக்கு கொண்டு வரப்படும் டில்லி கேரட் :கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால் குழப்பம்
ADDED : பிப் 19, 2024 12:40 AM

குன்னுார்:ஊட்டிக்கு டில்லி கேரட் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள கேரட்டுடன் கலப்படம் செய்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகளை, 15 ஆயிரம் விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். சமீப காலமாக சமவெளி பகுதிகளிலும் கேரட், பீட்ரூட், கோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.
எனினும் நீலகிரியில் விளையும் மலை காய்கறிகளுக்கு அதன் தரத்தின் மூலம் உரிய விலை கிடைத்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ஊட்டி கேரட், 45 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, டில்லி கேரட் வரத்து, 25 முதல் 30 ரூபாய் விற்கப்படுகிறது. டில்லி கேரட் தரம் சுவை இல்லாமல் இருந்த போதும். விலை குறைவு என மக்கள் பலரும் வாங்கி செல்கின்றனர். நீலகிரியின் கேரட் விற்பனை பாதித்து வருகிறது.
எடப்பள்ளியை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், ''கடந்த, 6 மாத காலமாக ஊட்டி கேரட்டிற்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது இரண்டு வாரங்களாக, இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட்டுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் சில மண்டி உரிமையாளர்கள் டில்லி கேரட்டை கொண்டு வந்து ஊட்டி கேரட் என்ற பெயரில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், ஊட்டி கேரட் விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே நீலகிரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருக்க, டில்லி கேரட் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும், சமீபகலமாக, ஊட்டி கேரட் உடன் டில்லி கேரட் கலந்து விற்பனை செய்வது புகார் வந்துள்ளது. இத்தகை முறைகேடுகளை தடுக்க வேண்டும்,'' என்றார்.

