/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேரிங்கிராஸ் ரவுண்டானா பகுதியில் 'டிவைடரால்' நெரிசல் வாகன ஓட்டிகள் குழப்பம்
/
சேரிங்கிராஸ் ரவுண்டானா பகுதியில் 'டிவைடரால்' நெரிசல் வாகன ஓட்டிகள் குழப்பம்
சேரிங்கிராஸ் ரவுண்டானா பகுதியில் 'டிவைடரால்' நெரிசல் வாகன ஓட்டிகள் குழப்பம்
சேரிங்கிராஸ் ரவுண்டானா பகுதியில் 'டிவைடரால்' நெரிசல் வாகன ஓட்டிகள் குழப்பம்
ADDED : பிப் 06, 2025 12:22 AM

ஊட்டி: ஊட்டி சேரிங்கிராஸ் ரவுண்டானா பகுதியில், 'டிவைடர்கள்' போடப்பட்டுள்ளதால் போக்கு வரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டியில் சேரிங்கிராஸ் ஆடம்ஸ் நீரூற்று ரவுண்டானா பகுதி முக்கிய சந்திப்பாக உள்ளது. இங்கு காந்தி சிலையும் உள்ளது. ஊட்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு மேற்கொண்டு சேரிங்கிராஸ் பகுதியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 'காந்தி சிலை எதிரே கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, குன்னுார் சாலை, கோத்தகிரி சாலை,' என, முக்கிய சந்திப்பு இடத்தில் ரவுண்டானா வடிவில் டிவைடர் அமைத்து போக்குவரத்தை மாற்றி உள்ளனர்.
இதனால், இப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்குகிறது. தவிர, வாகன ஓட்டிகள் இந்த 'டிவைடரால்' வாகனங்களை இயக்குவதில் குழப்பம் அடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை துறையினர் இதற்கான பணியை மேற்கொண்டாலும், போக்குவரத்தை சீர்படுத்தும் போலீசார் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
டவுன் டி.எஸ்.பி., நவீன் குமார் கூறுகையில்,''சேரிங்கிராஸ் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. டிவைடர் அமைத்தது எதற்காக என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்,'' என்றார்.