தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

 திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

 திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஏப் 16, 2026 05:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 05:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றனர்.

கடந்த, 2025-26ம் கல்வி ஆண்டில் நடந்த தேசிய வருவாய் வழி மற்றும் திறன் கல்வி உதவித்தொகை தேர்வில், மாவட்ட அளவில் ஆறு மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

அதில், இரண்டு பேர் உப்பட்டி பாரதமாதா மேல்நிலை பள்ளியை சேர்ந்தவர்கள். அத்துடன் ஊரக திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில், 50 மாணவர்கள் வெற்றி பெற்ற நிலையில் ஆறு பேர் இப்பள்ளியை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு படிப்பதற்கான கல்வித்உதவி தொகை வழங்கப்பட உள்ள நிலையில், கல்வி மற்றும் பொது அறிவில் சிறந்து விளங்கி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பிஜு ஜோசப் வரவேற்றார்.

மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, பள்ளி மேலாளர் பாதர் ஜோசப் மருத்துவமஸ், பள்ளி தாளாளர் வர்கீஸ் ஆகியோர் வாழ்த்தி பேசியதுடன், பரிசு வழங்கினர். துணை முதல்வர் பாபு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us