தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காங்., வேட்பாளர் ஊட்டியில் வேட்பு மனு

 காங்., வேட்பாளர் ஊட்டியில் வேட்பு மனு

 காங்., வேட்பாளர் ஊட்டியில் வேட்பு மனு


ADDED : ஏப் 06, 2026 08:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 08:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் ராமசந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர் டினு அரவிந்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதன்பின், ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊட்டி தொகுதியை பொறுத்தவரை இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த கணேசன் ஏற்கனவே கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். தொட்டபெட்டா முதல் தாவரவியல் பூங்கா வரை செய்ய வேண்டிய ரோப்கார் திட்டம் மட்டும் நிலுவையில் உள்ளது.

ஊட்டியில் வாகன நிறுத்தும் இடம் இல்லாதது பெரும் பிரச்னையாக உள்ளது. அந்த விஷயத்திற்கும் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட எச்.பி.எப்., தொழிற்சாலைக்கு பதிலாக, ஐ.டி., நிறுவனம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி தரப்படும்.'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us