sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 காங்., கட்சியினர் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

/

 காங்., கட்சியினர் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

 காங்., கட்சியினர் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

 காங்., கட்சியினர் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 28, 2026 05:43 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: 'தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும்,' என, வலியுறுத்தி, ஊட்டியில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை, மத்திய அரசு மாற்றி, 125 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது.

இதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், 'இந்த திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும்,' என, வலியுறுத்தி, காங்., கட்சியினர், ஊட்டியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, கலெக்டரிடம் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்., மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். ஊட்டி நகர தலைவர் நித்ய சத்யா, வட்டார தலைவர் ராமச்சந்திரன், கோத்தகிரி வட்டார தலைவர் சில்லபாபு உட்பட பல கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us