சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2026 05:24 AM

அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் மகளிர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிரணி தலைவர் நித்யா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜ், ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிரணியினர், எரிவாயு சமையல் சிலிண்டருக்கு மாலையிட்டு, ஒப்பாரி வைத்து கும்மியடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொடர்ந்து, சிலிண்டருக்கு விலை உயர்த்திய மத்திய பா.ஜ., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் பிரியா நாஷ்மிகர், மாநில பொது செயலாளர் விவேக் லஜபதி, மாவட்ட பொதுச்செயலாளர் நேரு, உயிலட்டி ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
