தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காங்., ஆர்ப்பாட்டம்; நகராட்சிக்கு கண்டனம்

காங்., ஆர்ப்பாட்டம்; நகராட்சிக்கு கண்டனம்

காங்., ஆர்ப்பாட்டம்; நகராட்சிக்கு கண்டனம்


ADDED : டிச 19, 2024 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2024 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்; பந்தலுாரில் காங்., சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; நெல்லியாளம் நகராட்சியின் முறை கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பந்தலுார் நகர தலைவர் ஷாஜி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்,'தேர்தல் வாக்குறுதி படி செக்சன்-17 நிலத்தில், வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்; சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும்; மனித- வன விலங்கு மோதலை நிரந்தரமாக தடுக்க வேண்டும்;

நெல்லியாளம் நகராட்சி தலைவர் -உறுப்பினர் இடையே பனிப்போரால் வளர்ச்சி பணிகள் முடங்கி கிடக்கிறது; தெருவிளக்கு அமைப்பதில் மற்றும் அம்மா உணவகத்தில் நடைபெறும் முறைகேடு தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.

அதில், பந்தலுார் வட்டார தலைவர் ரவி, கூடலுார் வட்டார தலைவர் அம்சா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபிநாத், அஷ்ரப், நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர் விஜயம்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us