தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இரவில் கட்டுமான பொருட்கள் திருட்டு : சி.சி.டி.வி., கேமராவுடன் பழங்குடிகளுக்கு வீடு கட்டும் பணி

 இரவில் கட்டுமான பொருட்கள் திருட்டு : சி.சி.டி.வி., கேமராவுடன் பழங்குடிகளுக்கு வீடு கட்டும் பணி

 இரவில் கட்டுமான பொருட்கள் திருட்டு : சி.சி.டி.வி., கேமராவுடன் பழங்குடிகளுக்கு வீடு கட்டும் பணி


UPDATED : டிச 13, 2025 08:13 AM

ADDED : டிச 13, 2025 08:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2025 08:13 AM ADDED : டிச 13, 2025 08:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே சப்பந்தோடு பகுதியில், சி.சி.டி.வி. கேமரா பாதுகாப்புடன், பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.

பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, புஞ்சை கொல்லி பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் வீடுகள் சிதிலமடைந்து குடியிருக்க முடியாத நிலையில், வீடுகள் கட்டவும் நில வசதி இல்லாத சூழல் ஏற்பட்டது.

இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, இவர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டு, வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில், ஏழு குடும்பங்களுக்கு சப்பந்தோடு பகுதியில், சாலையோர வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கு வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாலையோரம் வனமாக உள்ள நிலையில், ஒப்பந்ததாரர் வீடு கட்டுவதற்காக கொண்டு வந்து வைத்த பொருட்களை, இரவு நேரத்தில் சிலர் திருடி சென்றதால் பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து இரவு நேரத்திலும் துல்லியமாக படம் பிடிக்கும், நவீன சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி, கேமரா கண்காணிப்பில் வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வம் கூறுகையில்,''பழங்குடியின மக்களுக்கு தரமான குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் எனும் நோக்கில், கட்டுமான பொருட்கள் கொண்டுவரப்பட்டு, பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், இரவு நேரத்தில் சிலர் கட்டுமான பொருட்களை திருடி சென்றனர்.

அதனால் தற்போது பகல் மற்றும் இரவு நேரங்களிலும் கட்டுமான பணிகளை, வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வகையில், சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அதன் கண்காணிப்பில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கட்டுமான பொருட்கள் திருடுவது தடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us