/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடிந்த பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணி
/
இடிந்த பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணி
ADDED : நவ 12, 2024 09:58 PM

ஊட்டி ; ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மழையால் இடிந்த பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியை ஒட்டியுள்ள தடுப்பு சுவர் சமீபத்தில் பெய்த மழைக்கு இடிந்தது. இதனால், ஆம்புலன்ஸ் வாகனம், நோயாளிகளை அழைத்து வரும் தனியார் வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
கனமழை பெய்தால் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் மேலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. 'மருத்துவ துறை சார்பில் இடிந்த பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்,' என, பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, நிதி ஒதுக்கப்பட்டு இடிந்த பகுதியில், 50 மீட்டர் நீளம், 10 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.