/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆரம்பி சோலை அருகே கட்டட கழிவுகள் வன விலங்குகளுக்கு ஆபத்து
/
ஆரம்பி சோலை அருகே கட்டட கழிவுகள் வன விலங்குகளுக்கு ஆபத்து
ஆரம்பி சோலை அருகே கட்டட கழிவுகள் வன விலங்குகளுக்கு ஆபத்து
ஆரம்பி சோலை அருகே கட்டட கழிவுகள் வன விலங்குகளுக்கு ஆபத்து
ADDED : பிப் 06, 2025 12:21 AM

ஊட்டி: ஊட்டி அருகே ஆரம்பி சோலை பகுதியில் கொட்டப்பட்ட கண்ணாடி துண்டுகள்;கட்டட கழிவு களால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக குடியிருப்பு, தங்கும் விடுதிகளை ஒட்டிய வனப்பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டுவது கண்டறியப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் விலங்குகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊட்டி 'ஹேவ்லாக்' சாலையில் ஆரம்பி சோலை அருகே புலி உட்பட வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில், கட்டட கழிவுகள், உடைந்த கண்ணாடி துண்டுகளை பலர் குவித்து வைத்து, அதன் மீது செடிகளை போட்டு மூடி வைத்துள்ளனர். கழிவுகளை பார்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் கண்ணாடி உட்பட கட்டட கழிவுகளை கொட்டுவதால், மக்களுக்கும், வன உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.