ADDED : மார் 29, 2026 03:28 PM
குன்னுார்: குன்னுார் சிம்ஸ் பூங்கா அருகே லீமா ரோஸ் நர்சரி தெருவில், ஆற்றோர ஆக்கிரமிப்பை அதற்ற நகராட்சி துறையினர் உத்தரவிட்டனர்.
குன்னுார் சிம்ஸ் பூங்கா அருகே லீமா ரோஸ் நர்சரி தெருவில், 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு பொது கழிப்பிடம் அகற்றப்பட்ட இடத்தில், கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்படுத்தியதுடன், அருகே உள்ள ஓடை பகுதியில் தனியார் சிலர் தடுப்பு சுவர் எழுப்பியது தொடர்பாக நகராட்சி, வருவாய்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டன.
தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராம், தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாய் அடைப்புகளை சரி செய்ய உத்தரவிட்டனர். ஓடை பகுதியில் தடுப்புச் சுவர் பணி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், 'அப்பகுதியில் மீண்டும் பணிகள், நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
