/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் அரசு பள்ளியில் ரூ.3.38 கோடியில் கட்டட பணி
/
கூடலுார் அரசு பள்ளியில் ரூ.3.38 கோடியில் கட்டட பணி
கூடலுார் அரசு பள்ளியில் ரூ.3.38 கோடியில் கட்டட பணி
கூடலுார் அரசு பள்ளியில் ரூ.3.38 கோடியில் கட்டட பணி
ADDED : பிப் 09, 2024 11:13 PM

கூடலுார்:கூடலுார் அரசு மேல்நிலை பள்ளியில், 3.38 கோடி ரூபாய் செலவில், 14 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
கூடலுார் அரசு மேல்நிலை பள்ளியில் அதிக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பழமையான கட்டடங்களை இடித்து விட்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டி தர, மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதனை ஏற்று 'நபார்டு' திட்டம் மூலம், 14 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட, 3.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் பழமையான, கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.
ஆசிரியர்கள் கூறுகையில், 'தமிழகத்தில், 28 அரசு மேல்நிலை பள்ளிகள் 'தகைசார்' பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு, தரம் உயர்த்தி, மேம்படுத்தி வருகின்றனர். அதன்படி, மாவட்டத்தில் இப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக்கு தேவையான அனைத்து கட்டடம் உள்ளிட்ட வசதிகளும், உயர் தரத்தில் மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதல் கட்டமாக, புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருவதுடன், ஏற்கனவே உள்ள வகுப்பறைகள் சீரமைத்து தரம் உயர்த்தப்படும் பணியும் நடந்து வருகிறது,' என்றனர்.