ADDED : பிப் 12, 2024 08:41 PM
கோத்தகிரி:கோத்தகிரியில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டம் சார்பில், விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் வரவேற்றார். தோட்டக்கலை துணை இயக்குனர் அப்ரூஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில், 'அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம்; தோட்டக்கலைத்துறை மூலம், விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள்; விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள்; கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை மற்றும் பட்டு வளர்ச்சி துறைகளின் மானிய திட்டங்கள்,' குறித்து, விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
தொடர்ந்து, இயற்கை வேளாண்மை குறித்து இயற்கை விவசாயி கணேசன், தெரிவித்தார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா உட்பட, விவசாயிகள் பலர் பங்கேற்றனர். 'அட்மா' திட்ட தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.